பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்று நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை இணை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர்,சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கான நடைமுறை உலக நாடுகளில் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
இவ்வாறான சமூக வலைத்தளங்களை பொதுமக்கள் பயன்படுத்துவது தொடர்பில் அவற்றை தெளிவுபடுத்துவதற்கு நாம் முயற்சிக்கின்றோம்.ஆனால் இதனை கட்டுப்படுத்துவதற்கோ நிறுத்துவதற்கோ நாம் தீர்மானிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.