தமிழ் இளையோர் மாநாடு 2022-சுவிற்சர்லாந்து.

1045 0

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து நடாத்திய இவ்வாண்டுக்கான தமிழ் இளையோர் மாநாடு 01.10.2022 ஆம் நாள் சனிக்கிழமை பாசல் மாநகரில் நடைபெற்றது. இதில் தமிழ் இளையோர் கலந்துகொண்டு தமிழர்சிறப்பு, வரலாறு, அரசியல், தாயகத்து மாணவர்களுக்கான கல்வி உதவிகள் தொடர்பாகவும் தமிழ்மொழிக்கல்வி பற்றியும் அதனைத் தொடர்ந்து சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகள் பற்றியும் கலந்துரையாடினர். தமிழ் இளையோர் திறன்கள், சாதனைகள் மற்றும் ஆக்கங்களினை அடையாளம் காணுதலும் வெளிக்கொணர்தலும் மதிப்பளித்தலும் தொடர்பாகவும் கலந்துரையாடி முடிவுகள் எடுக்கப்பெற்றன. இம்மாநாட்டில் தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்கள் அருணாசலம் சண்முகதாஸ் மற்றும் மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். அத்துடன் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் இணைப்பாளர், இணை இணைப்பாளர் ஆகியோரும் டென்மார்க் நாட்டிலிருந்து வருகைதந்திருந்த இளையோரும் கலந்து சிறப்பித்தனர். அடுத்த ஆண்டுக்கான தமிழ் இளையோர் மாநாடு 30.09.2023 ஆம் நாள் நடாத்தத் தீர்மானிக்கப்பெற்றுள்ளது.