லெப் கேணல் தியாக தீபம் திலீபன் அவர்களின் 35 ம்ஆண்டு வணக்க நிகழ்வுகள் இன்றுதமிழர்ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் நேற்றய தினம் லண்டனில் இடம் பெற்றது.
நிகழ்வில் பொது சுடரினை திரு கதிர்ச்செல்வன்அவர்கள் எற்றி வைத்தார்கள். ஈகைசுடரினை தொடர்ந்து திரு உருவப்படத்திற்க்கானமலர் மாலையினை திருமதி அன்னலக்ஷ்மிஜெயபாபு அணிவித்தார்கள்.
நிகழ்வில் கவிதைகள் , நினைவு உரைகள் என பலநிகழ்வுகள் இடம் பெற்றன . அத்துடன் EXCEL மண்டபத்தில் நடை பெற இருக்கும் 2022 ம் ஆண்டிற்கான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் பற்றிய பிரசுரத்துடன் கூடிய அறிமுகமும், தேசிய மாவீரர் நாளில் பிரித்தானிய தமிழ் மக்கள் அணி திரண்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தி மாவீரர்களின் இலட்சியத்தை சுமந்தவர்களாய் தமிழ் மக்களின் அரசியல் விருப்பினை சர்வதேசத்திற்கு எடுத்தியம்பும் தேசியக் கடமையாற்றும் பணிக்கு அறை கூவல் விடுக்கப்பட்டது.
இறுதியாக திலீபனின் கனவு நனவாகும் வரைபயணிப்போம் என்கின்ற உறுதி மொழியோடு நிகழ்வுநிறைவுபெற்றது.