கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பில் இராணுவம் நிலைகொண்டுள்ள காணிகளை விடுவிப்பு தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஆறயும் கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.
காணி விடுவிப்பு தொடர்பில் அரசாங்க அதிகாரிகள் முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது
இந்த சந்திப்பில் கரைதுரைப்பற்று பிரதேசசெயலாளர் சி .குணபாலன், புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் ம.பிரதீபன் உள்ளிட்டவர்களும் முல்லைத்தீவு மாவட்ட காணி உத்தியோகஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராசா, சிவப்பிரகாசம் சிவமோகன், வடமாகாண சபை கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா, வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், ஆ.புவனேஸ்வரன் க.சிவசேனசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்