வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரினால் ஆசிரியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைக் கண்டித்து இடம்பெற்று வந்த தொடர் போராட்டம் மூன்றாம் நாளான இன்று(15) மாலையுடன் முடிவுக்கு வந்துள்ளது.
ஆசிரியர்களின் பணித்தடையை நீக்கி அவர்களை மீளவும் பாடசாலை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பணித்தடை, ஆசிரியர்கள் இடமாற்றம் ஆகிய இரு விடயங்கள் தொடர்பான எழுத்து மூல உறுதிமொழி வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்டதையடுத்து இந்தப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.