தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது 35ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு -Dortmund,Germany.

271 0

யேர்மன் மத்திய மாநிலத்தில் அமைந்துள்ள டோட்முன்ட் நகரில் 03.10.2022 திங்கட்கிழமை அன்று தியாகதீபம் திலீபன் அவர்களது 35ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
வருகை தந்திருந்த அனைவரும் மிகவும் உணர்வோடு சுடர் -மலர் வணக்கம் செய்தபின்பு அகவணக்கத்தோடு தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது நினைவுகளோடு எழுச்சிநிகழ்வுகள் ஆரம்பமாகியது.நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலோடும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரக மந்திரத்தோடும் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது 35ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு மிகவும் உணர்வோடு நிறைவு பெற்றது.