லிவர்குசன் தமிழாலயத்தின் நவராத்திரி விழா.

424 0

யேர்மன் தமிழ்க்கல்விக்கழகத்தின் கீழ் இயங்கும் தமிழாலயங்களில் ஒன்றான லிவர்குசன் தமிழாலயத்தின் நவராத்திரி விழா 04.10.2022 விஜயதசமி அன்று மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விஜயதசமி ஆதலால் குழந்தைகளுக்கு ஏடு தொடக்குதல் நிகழ்வும் இடம்பெற்றது.
மாணவர்கள் உரைகள் ,கவிதைகள் , போன்றவற்றையும் நிகழ்த்தினர்.

அத்துடன் இவ் வருடம் லிவர்குசன் தமிழாலயத்தில் ஆண்டு 1 இல் இணைந்த எட்டு மாணவர்களுக்கான கால்கோள் நிகழ்வும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.மாணவர்கள் தமிழாலயத்திற்குள் அழைத்து வரப்பட்டு , நிர்வாகி ,ஆசிரியர்களால் வாழ்த்துரைகள் வழங்கப்பட்டு வரவேற்கபபட்டனர்.