புத்தல பிரதேசத்தில் 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு விஷமடைந்ததன் காரணமாக குறித்த மாணவர்கள் சுகவீனமடைந்துள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், உணவு ஒவ்வாமை காரணமாக சுகவீனமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப் பற்றாக்குறை நிலவி வருகிறது .இதனை நிவர்த்தி செய்தற்காக பாடசாலைகளில் மாணவர்களுக்கு போஷாக்கு உணவு வழங்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.