வசந்த முதலிகேவின் உயிருக்கு ஆபத்து – நாடாளுமன்றில் சஜித் பிரேமதாச

173 0

வசந்த முதலிகேவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் தெரிவித்தார்.

வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹசந்த குணதிலக்க ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் வசந்த முதலிகே சிறையில் இருந்து இரவு நேரங்களில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியதையும் சுட்டிக்காட்டினார்.

நாட்டிற்கு எதிரான மனித உரிமைப் பிரேரணைகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அரசாங்கமே செயற்படுவதாகவும் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.