இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளை!

120 0

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.

பிரித்தானியா தலைமையிலான சில முக்கிய நாடுகள், ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான இறுதி வரைவை முன்வைத்துள்ளன.

30 நாடுகளின் இணை அனுசரணையுடன் பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகள் இணைந்து இந்த வரைவை முன்வைத்துள்ளன.

எவ்வாறாயினும், இலங்கை அதனை எதிர்க்கும் எனவும், வரைவிலுள்ள சர்வதேச நாடுகளின் தலையீடு தொடர்பான 8ஆவது சரத்துக்கு எதிராக செயற்பட்டு நிற்கும் எனவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.