பெட்ரோலியப் பொருட்கள் (சிறப்பு விதிகள் திருத்தம்) மசோதா திருத்தங்களுடன் அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவின் அனுமதியை பெற்றுள்ளது.
பெட்ரோலியப் பொருட்கள் (சிறப்பு விதிகள் திருத்தம்) மசோதா, உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி திருத்தங்களுடன் மின்சாரம் மற்றும் எரிசக்தி தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவின் அனுமதியை பெற்றுள்ளது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் நேற்று (04) பாராளுமன்றத்தில் மின்சக்தி மற்றும் எரிசக்தி தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு கூடிய போதே இதற்கான அனுமதி கிடைத்துள்ளது.