10 அத்தியாவசிய பொருட்களை 5 ரூபா வரை அதிகரித்து விற்பதற்கு அனுமதி

396 0

979778050Priceஅர­சாங்­கத்­தினால் 15 அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்கு கட்­டுப்­பாட்டு விலைகள் நிர்­ண­யிக்­கப்­பட்ட நிலையில் அவற்றில் 10 பொருட்­களின் விலையை 5 ரூபா வரை அதி­க­ரித்து விற்­பனை செய்ய முடி­யு­மென நுகர்வோர் விவ­கார அதி­கார சபை­யினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அதி விசேட வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அந்த வர்த்­த­மா­னியில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, கட்­டுப்­பாட்டு விலை நிர்­ண யம் செய்­யப்­பட்­டுள்ள 16 அத்­தி­யா­வ­சியப் பொருட்­களில் பத்து பொருட்­க­ளுக்கு மேலும் 5 ரூபா அதிக பட்­ச­மாக சேர்த்து வர்த்­த­கர்கள் விற்­பனை செய்ய முடியும்.

மைசூர் பருப்பு, இறக்­கு­மதி செய்­யப்­பட்ட நெத்­தலி, கடலை, பயறு, வெள்­ளைச்­சீனி, கோதுமை மா, காய்ந்த மிளகாய், கட்டா மற்றும் சாளை கரு­வாடு, மாசி உள்­ளிட்ட பொருட்­க­ளுக்கே இவ்­வாறு மேலும் 5 ரூபாவரை சேர்த்துக்கொள்ள முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.