கௌதாரிமுனையில் இறால் பண்ணை

149 0

கௌதாரிமுனை, விநாசியோடை பகுதியில் ஐம்பது மில்லியன் முதலீட்டில்  அமையவுள்ள நவீன இறால் பண்ணை திட்டத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளுர் மீனவர்களது எதிர்ப்பின் மத்தியில் ஆரம்பித்து வைத்துள்ளார்.

சுமார் 10 ஏக்கர் பரப்பில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் வருடம் ஒன்றிற்கு 300 தொன் இறால் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்றும் அதன்மூலம், வருடம் தோறும் சுமார் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அந்நியச் செலாவணியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சீன நாட்டிற்கு கடலட்டை வளர்ப்பிற்கென கௌதாரிமுனை தாரை வார்க்கப்பட்டிருந்தது.

சீன கடலட்டை பண்ணைகள் தொடர்பில் சர்ச்சைகள் மூண்டிருந்த நிலையில் தற்போது இறால் பண்ணைகளிற்கு கடல் தாரை வார்க்கப்பட்டுள்ளது.