கரோனா காலத்தில் நாம் கற்றுக் கொண்ட முக்கிய பாடம்: சவுமியா சுவாமிநாதன்

219 0

காலநிலை மாற்றம், சுற்றுசூழலுடன் நம் வாழ்வு எவ்வளவு பிணைந்துள்ளது என்ற புரிதல்தான் பெருந்தொற்று காலத்தில் நாம் கற்றுகொண்ட முக்கிய பாடம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைகாட்சிக்கு சவுமியா சுவாமிநாதன் அளித்த பேட்டியில், “ இந்த கரோனா தொற்று காலத்தில் நாம் கற்று கொண்ட பாடம் காலநிலை மாற்றம். நாம் சுற்றுசூழலுக்கு என்ன செய்தோமோ அதற்கான விளைவை தற்போது எதிர் கொண்டுள்ளோம். நமது வாழ்வு சுற்றுசூழலுடன் இணைந்துள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் மற்ற நாடுகளுக்கும் நிகழலாம்.

20, 21 ஆம் நூற்றாண்டில் தடுப்பூசிகள் பலரின் உயிரை காப்பாற்றியுள்ளது. கரோனா தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பாகவும், செயல்திறனுடனும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் லட்சத்தில் 2-3 எதிர்பாராத முடிவுகள் நிகழலாம்.

கரோனா தடுப்பூசிகள் நோயின் தீவிரத்தன்மையை குறைக்கின்றன. நாம் கரோனா தடுப்பூசிகளாலேயே விரைவில் குணமாக்கப்பட்டோம். 2 கோடிக்கும் அதிகமான உயிர்கள் தடுப்பூசிகளால் காக்கப்பட்டுள்ளது. சிலர் கரோனா தடுப்பூசி போடாமலேயே கரோனாவின் தீவிரத்தனமைக்கு உள்ளாகமல் இருக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.

அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளாததன் காரணமாகவே அதிகமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.