கலவரங்கள் உருவாகுவதற்கு மூலகாரணம் நல்லாட்சி அரசாங்கமே

134 0

நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தன்மையானது மக்களை துன்பத்திற்குள் தள்ளியுள்ளது. நாட்டையும், மக்களையும் அரசியல் புரட்சிக்கு காரணமாக காணப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகளும் உருவாகுவதற்கு மூலக்காரணம் நல்லாட்சி அரசாங்கமே என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தன்மையானது மக்களை துன்பத்திற்குள் தள்ளி நாட்டையும் மக்களையும் அரசியல் புரட்சிக்கு காரணமாக காணப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகள் தோன்றுவதற்கு மூலக்காரணம் நல்லாட்சி அரசாங்கமாகும்.

மேலும் நல்லாட்சி அரசாங்கம் முறையாக செயற்பட்டு இருந்தால் ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கம்  ஆட்சியை கைப்பற்றி இருக்காது.

மேலும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அங்கம் வகித்த ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுதந்திர கட்சி போன்ற கட்சிகள் கடந்த காலங்களில் செயற்பட்ட விதம் தொடர்பில் நாம் அறிந்த ஒன்றாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசியலுக்கு ஒன்றும் புதியவரல்ல. அவர் கடந்த 2015-2019 ஆண்டு காலப்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் மிக முக்கிய அமைச்சுப் பதவிகளில் அங்கம் வகித்த ஒருவர். மேலும்  ஐக்கிய தேசிய கட்சியின் பதில் தலைவராக செயல்பட்டவர்.

எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்களான  ராஜித சேனரத்ன சுகாதார அமைச்சர் மற்றும் கபீர் ஹசீம் பெருந்தெருக்கள் போன்ற அமைச்சு பொறுப்புக்களை ஏற்று அமைச்சராக செயற்பட்டவர்கள்..

அன்று ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் முறையாக  ஆட்சி செய்திருந்தால்  இன்று நாடு இவ்வாறு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டு இருக்காது. நாட்டில் போராட்டங்கள், கலவரங்கள் உருவாகியிருக்காது.

இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட முட்டாள் தனமான தீர்மானங்கள் காரணமாக நாடு தீ பற்றி எரிந்தது

இவ்வாறு நாட்டை   தீ மூட்டுவதற்கு  சந்தர்பத்தை மற்றும் அதற்கான சூழ்நிலையை உருவாக்கி கொடுத்தவர்கள் கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்களாகும்.

மேலும் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தி நாட்டை முற்றாக  வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்த  பொறுப்பு நல்லாட்சி அரசாங்கத்தையும் சாரும் என்றார்.