மக்கள் நலன்கருதி வலி.தென்மேற்கின் பொது இடங்களில் மேலும் 5 நீர்த்தாங்கிகள்

399 0

வலி.தென்­மேற்கு பிர­தே­சத்தில் மக்­க­ளுக்­கான குடிநீர் விநி­யோ­கத்தை அதி­க­ரிக்கும் நோக்­குடன் பொது இடங்­களில் மேலும் 1000 லீற்றர் கொண்ட ஐந்து தண்ணீர் தாங்­கிகள் வைக்­கப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான நட­வ­டிக்­கையை பிர­தேச சபை செய­லாளர் மேற்­கொண்­டுள்ளார்.

வலி.தென்­மேற்கு பிர­தே­சத்தில் உவர்நீர் காணப்­படும் கடற்­கரைப் பிர­தே­சங்­க­ளிலும் கிணற்று நீரில் ஒயில் தென்­பட்­ட­மையைத் தொடர்ந்து மானிப்பாய், சுது­மலை, சண்­டி­ லிப்பாய், மாசி­யப்­பிட்டி ஆகிய இடங்­களி லும் கடற்­றொ­ழி­லா­ளரின் நலன் கருதி காக்­கை­தீவு இறங்­கு­து­றை­யிலும் ஏற்­க­னவே 52 தண்ணீர்த் தாங்­கிகள் வைக்­கப்­பட்­டுள்­ளன. இதன்­மூலம் மாதாந்தம் 75 ஆயிரம் ரூபா செலவில் குடிநீர் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது.

இந் நிலையில் மக்கள் தொடர்ந்து தடை ­யின்றிக் குடி­நீரைப் பெற்­றுக்­கொள்ளும் வகையில் குடிநீர் விநி­யோ­கத்தை மேலும் விஸ்­த­ரிக்கும் நோக்­குடன் பொது­மக்கள் அதி­கமாக நட­மாடும் பொது இடங்­களில் ஐந்து தண்ணீர்த் தாங்­கிகள் வைக்­கப்படவு ள்­ளன. இந்தத் தாங்கிகள் தேவையான நேரங்க ளில் இடத்துக்கிடம் மாற்றக் கூடி யவாறு அமைப்பட்டுள்ளன.