தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது 35ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு -ஒஸ்னாபுறுக்

440 0

யேர்மன் வடமாநிலத்தில் அமைந்துள்ள ஒஸ்னாபுறுக் நகரில் 01.10.2022 சனிக்கிழமை அன்று தியாகதீபம் திலீபன் அவர்களது 35ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தியாகதீபம் திலீபன் அவர்களது திருவுருவப்படத்திற்கு ஒஸ்னாபுறுக் நகர இளைய செயற்பாட்டாளர்களான செல்வன் பிரபாகரன் மரியதாஸ், செல்வன் எட்வேட் அகஸ்ரின் ஆகியோர் பூமாலை அணிவித்தார்கள்.

பொது ஈகைச்சுடரினை ஒஸ்னாபுறுக் நகர செயற்பாட்டாளர்களில் ஒருவராகிய செல்வன் வினூஜன் இரகுநாதன் அவர்கள் ஏற்றிவைக்க,சுடர்-மலர் வணக்கத்தினை செல்வன் சரண் வாசன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள். தொடர்ந்து வருகை தந்திருந்த அனைவரும் மிகவும் உணர்வோடு சுடர் -மலர் வணக்கம் செய்தபின்பு அகவணக்கத்தோடு தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது நினைவுகளோடு எழுச்சிநிகழ்வுகள் ஆரம்பமாகியது. கவிவணக்கம்,இசைவணக்கம்,நினைவுரை, திலீபன் அண்ணா அவர்களது காட்சித்தொகுப்பு போன்ற எழுச்சிநிகழ்வுகளை ஒஸ்னாபுறுக் நகர இளைய செயற்பாட்டாளர்கள் உணர்வோடு தொகுத்து வழங்கியிருந்தார்கள்.

குறிப்பாக திலீபன் அண்ணா அவர்களது காட்சித்தொகுப்பு வந்திருந்த அனைவரையும் கண்கலங்க வைத்து உணர்வூட்டியது.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலோடும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரக மந்திரத்தோடும் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது 35ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு மிகவும் உணர்வோடும் எழுச்சியோடும் நிறைவு பெற்றது.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”