ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள சிலருக்கு ஆளுங்கட்சி பதவிகள் இல்லாது இருக்க முடியாதென அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 1994ஆம் ஆண்டிலிருந்து 25 வருடங்களுக்கு மேலாக நாம் நாட்டை ஆட்சி செய்துள்ளோம். சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களே நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்கள்.
இதனால் சுதந்திரக் கட்சியில் உள்ள சிலருக்கு நோய் ஒன்று இருக்கிறது. ஆட்சியதிகாரத்தில் தொடர்ந்து இருந்ததால், பதவிகள் இல்லாது இருக்க முடியாது. இதுவொரு நோய் எனவும் தெரிவித்தார்.