கிளிநொச்சி, கோணாவில், யூனியன்குளம் ஆகிய பகுதிகளில் பாடசாலைகளுக்குச் செல்லாத 25 சிறார்கள் பிடிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக ஒரு சிறுவனை நன்னடத்தை பாடசாலையிலும் ஆறு சிறுவர்களை சிறுவர் இல்லத்திலும் ஒரு சிறுமியை பாதுகாப்பு இல்லத்திலும் ஏனைய சிறுவர்களை அவர்களது பெற்றோர்களிடம் கடுமையாக எச்சரிக்கப்பட்டும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி, கோணாவில், யூனியன்குளம், புதுமுறிப்பு ஆகிய பகுதிகளில் ெவள்ளியன்று மாவட்டச் செயலகத்தின் சிறுவர் உத்தியோகத்தர்கள் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள், கிராம அலுவலர், பொலிஸார் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது பாடசாலைகளுக்குச் செல்லாத மற்றும் பாடசாலைகளை விட்டு இடைவிலகிய 25 சிறார்கள் பிடிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தால் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சிறுவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லாது பல்வேறு குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறான பாடசாலை செல்லாத சிறார்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு இவ்வாறான செயற்பாடுகள் கடந்த ஒரு வார காலமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் எழுபத்தி ஐந்திற்கும் மேற்பட்ட சிறார்கள் இவ்வாறு பிடிக்கப்பட்டு கல்வியில் இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக் கது.
இதேவேளை, கிளிநொச்சி புதுமுறிப் புப் பகுதியில் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்து தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டவர்களை உடனடியாகக் கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவி ட்டுள்ளது.
கிளிநொச்சி புதுமுறிப்பு கோணாவில் யூனியன்குளம் ஆகிய பகுதிகளில் பாடசாலை செல்லாத சிறுவர்களை மீள இணைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் பொலிசார், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு இடையூறு விளைவித்து அவர்களை தகாத வார்த்தைப்பிரயோகம் மேற்கொண்ட பாடசாலை செல்லாத பிள்ளையின் பெற்றோர் பாதுகாவலர்கள் தொடர்பாக நீதிவான் முன்னிலையில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை உடனடியாக கைது செய்து மன்றில் ஆயர்படுத்துமாறு பொலிசாருக்கு கிளநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .