சிங்கப்பூரில் நடைபெறவுள்ள மூன்றாவது தெற்காசிய புலம்பெயர் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் முகமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சிங்கப்பூர் பயணமாகவுள்ளார்.
குறித்த மாநாட்டில் கலந்து கொண்டு ஆரம்ப நிகழ்வில் உரையாற்றவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதன் பின்னர் அந்நாட்டு ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் விசேட சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அவருடைய பாரியார் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் சிங்கப்பூர் செல்லவுள்ளனர்.
சிங்கப்பூர் அரசாங்கம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள மூன்றாவது தெற்காசிய வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் அதேவேளை அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க ஆகிய மூவருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.