மாணவர்களுக்கு வாடகைக்கு தங்க வழங்கப்பட்டுள்ள ஆதனங்களை உடனடியாக பதிவு செய்க!

171 0

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வாடகைக்கு தங்க வழங்கப்பட்டுள்ள ஆதனங்களை உடனடியாக பதிவு செய்யுமாறு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில்   இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட ஏழாம், எட்டாம் மற்றும் ஒன்பதாம் வட்டாரங்களில் மாதாந்த கட்டணம் பெறப்பட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கான தங்குமிடங்களை வீடாகவோ அறைகளாகவோ வழங்கியுள்ள ஆதன உரிமைராளர்கள் எவரும் இதுவரை பதிவு செய்யாத நிலையில், எதிர்வரும் 12 ஆம் திகதி ஐப்பசி மாதத்திற்கு முன்னதாக சபையில் பதிவு செய்யுமாறும் சபையின் தீர்மானத்திற்கு அமைவாக சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தங்குமிடம் வழங்கும் செயற்பாட்டினை ஒடுங்குபடுத்துவதற்காகவும் சுகாதார சீர்கேடுகளை தவிர்க்கும் முகமாகவே இப்பதிவினை மேற்கொள்வது அவசியமாகும் எனவும் குறித்த திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்படாத தங்குமிடங்கள் சபையினால் அடையாளம் காணப்படும் பட்சத்தில் உடைமையாளருக்கு எதிராக கடுமையான சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

அண்மையில் மேலதிகமாக ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிரதேசரீதியாக களவுகள் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதோடு பல்வேறு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

சூரிய மின்கலங்களை ஊள்ளூராட்சி நிறுவனமாக பொருத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளபோதிலும் பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றம் காரணமாக அதனை தற்சமயம் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் விரைவில் மேலதிக நேர மின்வெட்டை அரசு குறைக்க வேண்டும் என்றார்.