தியாக தீபத்தின் 35ஆம் ஆண்டு நினைவேந்தலை குழப்பிய வேலன் சுவாமிகள்.

325 0

தமிழ் மக்களின் சுதந்திர வாழ்வுக்காய் இந்திய அரசிடம் 15.09.1987 அன்று ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். நல்லூர் முன்றலில் நீராகாரம் அருந்தாமல் (அகிம்சை வழியில்) உண்ணாநிலை போராட்டம் தொடர்ந்து 26.09.1987 அன்று 12ம் நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளான இன்று (26.09.2022) யாழ், நல்லூரிலுள்ள திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் நடந்து முடிந்துள்ள நிலையில் அந்த உணர்வெழுச்சியை சிதைக்கும் நோக்கில் இந்திய அரசின் திரைமறைவில் செயற்படும் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினர் நடந்துகொண்டுள்ளது என்பது தமிழ் மக்களிடைய பேரதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது .

பெரும் திரளான மக்கள் நினைவேந்தல் திடலுக்கு வருகை தந்து உணர்வுபூர்வமாக நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் உணர்வுபூர்வ நினைவேந்தலை குழப்பும் செய்யும் நோக்கில் இந்தியாவின் அடிவருடி வேலன் சுவாமி சார்ந்த பொதுக் கட்டமைப்பினர் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் அடைந்துள்ளார்கள் மேலும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் இயங்கும் பொது கட்டமைப்பின் மீது தவறில்லை என்ற பிம்பத்தில் சில தமிழ் ஊடகங்களில் செய்தி வெளியாகும் நிலையில் அதனை கண்டு உண்மையான தகவலை மறைத்து இந்தியாவின் நிகழ்ச்சி நிரல் இயங்கும் சில ஒட்டுக்குழுக்களுக்கு ஆதரவு தருகிறார்கள் என்று தமிழர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்

முக்கிய குறிப்பு :-

தியாக தீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்களின் முப்பத்தி ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் இவ்வருடமும் வழமைபோல தொடங்கி உணர்வெழுச்சியுடன் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் நினைவேந்தப்பட்டு வருகின்றது.இந்த எழுச்சியினைச் சிதைக்கும் வகையில் அல்லது அதன் புனிதத்தை கெடுக்கும் வகையில் இந்தியா மற்றும் சிங்களப் பேரினவாத அரசினால் அமைக்கப்பட்டுள்ள சில அரசியல் முகவர்கள் மற்றும் சிங்கள சிங்கள அரசின் ஒட்டுக்குழுவான ஈபிடிபி மற்றும் வால்பிடிகள் அனைவரும் இணைந்து தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளனர்.ஈபிடிபி தயவில் யாழ் மேயரான மணிவண்ணன் தலைமையில் கூட்டம் போட்டு பின் அது பலனளிக்காத நிலையில் புலனாய்வுக்கட்டமைப்புகளுடன் இணைந்து பணிசெய்யும் போராளிகள் பலரையும் இணைத்து 7பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது.குழுவில் உள்ளவர்கள் யாரும் 2009இற்குப்பின் 13ஆண்டுகளாக தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல் செய்ய விரும்பாமலும் பயத்திலும் ஒளித்திருந்தவர்கள்.அவர்கள் எப்படி உணர்வெழுச்சியுடன் தியாக தீபத்திற்கு வணக்கம் செலுத்தமுடியும்.எம்மை அழித்தவன் காலை நக்குகறவர்களால் இதைச் செய்யமுடியாது. தற்போது பொதுக்கட்டமைப்பானது 15 பேரைக் கொண்டதாக தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை சிதைக்கும் நோக்கோடு உருவாக்கம் பெற்றுள்ளது.இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தியப் புலனாய்வு முகவராக களமிறக்கி p2p போராட்டத்தை முன்னெடுத்து .சொதப்பல் வேலையாக சுமந்திரன் சாணக்கினுடன் இணைந்து சறுக்கிவிழுந்தவர். பின் முள்ளிவாய்கால் போராட்டத்தினையும் பொதுக்கட்டமைப்பு என்ற பெயரில் நாசமாக்கி சிறிலங்காச் சம்பந்தி விக்கியை அருக்கில் இருத்தி நினைவேந்தல் செய்யப்பட்டது.

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கும் அந்த வலிசுமந்த வாழ்வுக்கும் சம்மந்தமில்லாதவர்கள் பொதுக்கட்டமைபாகியது போல் தியாக தீபத்தின் நினைவேந்தலையும் இந்திய-சிறிலங்காப் புலனாய்வாளர்களின் ஏற்பாட்டோடு இல்லாதொழிக்க பொதுக்கட்டமைப்பை நிறுவியுள்ளார்கள்.

இவர்கள் எல்லோரும் 13 ஆண்டுகளாய் எங்கிருந்தார்கள்? எந்தக் கிரகத்தில் இருந்து வந்தார்கள் என யாருக்கும் தெரியுமா?

இத்தனை வருடமாக முகவரியற்ற வேலன் போன்ற கள்ளச்சுவாமிகள் எப்படி இதற்குள் கொண்டுவரப்பட்டார்கள் என்பதை ஆழமாகப் பார்க்க வேண்டும்.யாழ் இந்துக்கல்லூரிக்கு இந்தி மொழி எப்படி வந்தது?அந்த வழியில் தான் இவர்களும் வந்தார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தினையும் அதன் ஈகங்களையும் இல்லாதொழித்து வரலாற்றில் அப்படி நிகழ்ந்ததாக தடயம் இல்லாது அழிக்கும் பணியில் ஈடுபடுத்தி களமிறக்கப்பட்டவர்கள் தான் இந்த சுவாமிகள். இந்துத்துவ வெறியினை தாயகத்தில் விதைத்து தமிழினத்தை கூறுபோட நினைக்கும் மோடி அரசுக்கு வால்பிடிகளாகவும் அரசியல் ஆய்வாளர்களாகவும் பலர் தம்மை வெளிப்படுத்திவருகின்றனர்.திலீபனை கைவிட்ட இந்தியா அவர் தியாக வரலாற்றையும் நினைவேந்தலையும் அழிக்க எம்மவர்களைக் களமிறக்கியுள்ளது. இந்திய சிங்கள அரசோடு சேர்ந்து செயல்படும் சில அரசியல் முகவர்களால் தற்பொழுது இந்த நினைவேந்தலை கையகப்படுத்த பொதுக் கட்டமைப்பு நிறுப்பட்டுள்ளது.

தியாக தீபம் தன்தியாகத்தால் 13ஐ எரித்தார். ஆனால் 13ஐ காவிச்செல்பவர்கள் எப்படி திலீபனை நெருங்க முடியும்?
மாவீரர் சக்தியினை உணராவர்கள் இப்படித்தான் செய்வார்கள். அவர்களின் சக்தி மக்கள் எழுச்சியாக வெடித்தெழுகின்ற போது இவர்களும் தூசாவார்கள்.
இது தான் வரலாறு. இதைப் படிக்காதவர்கள் இனிப் படிப்பார்கள்.

இந்திய அரசின் 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக திலீபன் அவர்கள் போராடினார் ஆனால் இந்தியாவின் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக செயல்படுபவர்கள் தற்பொழுது திலீபனின் நினைவேந்தலை தாங்கள் செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறார்கள் மேலும் பேரினவாத சிங்கள அரசின் அடிவருடியாக செயல்படும் கோத்தபாய உடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் ஜனநாயகப் போராளி கட்சிக்கும் மற்றும் இந்திய இந்திய அரசு போடும் எலும்புத் துண்டு வாலாட்டும் வேலன் சுவாமிகள் போன்ற தமிழின துரோகிகளுக்கும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை நடத்துவதுக்கு எவ்வித அருகதையும் இல்லை.அருகில் நெருங்கவும் முடியாது.

இத்தனை வருடமாக தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பல்வேறு அடக்குமுறைகளுக்குள்ளும் 13 ஆண்டுகளாய் உணர்வெழுச்சுயுடன் அடிபணியாது நடத்திவந்த நிலையில் தற்போது நினைவேந்தல் பொது கட்டமைப்பு என்கின்ற சூனிய கட்டமைப்பை உருவாக்கி அதில் சிங்கள இராணுவமும் அங்கம் வகிக்க அனுமதியளிக்கும் வகையில் உருவாக்கி ,எடுப்பார் கைப்பிள்ளையாக அமைத்திருக்கும் பொது கட்டமைப்பும் ,தாங்கள் தான் செய்ய வேண்டும் என்பதில் உள்ள உள்நோக்கம் என்ன?

மேலும் இந்த பொது கட்டமைப்பில் தன்னை ஒரு முன்னாள் போராளியாக அடையாளப்படுத்திக் கொண்டு களமிறங்கியுள்ள காக்கா என்கின்ற நபர் இந்திய ராணுவ காலத்திலேயே இந்திய அரசிடம் சரணடைந்தவர் என்பது குறிப்பிடதக்கது இவரை இயக்கம் ஒரு சாதாரண ஒரு உறுப்பினராக தான் வைத்திருந்தது தவிர இவர் முக்கிய போராளியாக இல்லை இதேவேளையில் 2009 ஆம் ஆண்டு இராணுவத்தில் சரணடைந்த இவர் இன்று புனர்வாழ்வு பெற்று சிங்கள ராணுவத்தின் கைப்பாவையாக மாறியுள்ளார் அன்று சரணடைந்த புதுவை ரத்தினதுரை உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது உயிருடன் உள்ளார்களா என்று தெரியாது ஆனால் இன்றோ காக்கா உயிருடன் இருக்கிறார் இவர் தன்னை முன்னாள் போராளி என்ற கோதாவில் அடையாளப்படுத்தி இனி நான் சொல்வதுதான் தத்துவம் என்ற கோட்பாட்டில் இயங்கும் படி சொல்லாமல் சொல்கிறார் எனவே இந்த முகமூடி அணிந்துள்ள துரோகிகளிடம் இருந்து தமிழ் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்