அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்ட 84 பேரையும் விடுதலை செய்யவேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 84 பேரையும் கைதுசெய்துள்ளதன் மூலம் இலங்கை அதிகாரிகள் கருத்து வேறுபாடுகளை தாங்கள் சகித்துக்கொள்ளப்போவதில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர் என சர்வதேச மன்னிப்புச்சபை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
கருத்து வேறுபாடுகளை கொண்டவர்களை ஒடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளிற்கு எதிராகவே இவர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது. (a)