அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக இயங்கி வரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம எம்.பிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பீரிஸின் இல்லத்தில் நேற்று (25) நடைபெற்ற இச்சந்திப்பின்போது நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக குமார வெல்கம தெரிவித்தார்.
புதிய கட்சி ஒன்றை நான் ஆரம்பித்திருந்தாலும் தனித்துப் பயணிக்க முடியாது. அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு ஒரு குடையின் கீழ் பயணிக்கவே விரும்புகிறேன் எனவும் தெரிவித்தார்.