கொழும்பு துறைமுக நகரத்திட்டமானது அடுத்த மாதம் ஆரம்பமாகும் என இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த துறைமுகத் திட்டம் உள்ளிட்ட ஏனைய அனைத்து திட்டங்களும் சட்டரீதியாக ஆரம்பிப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள் அனைத்தும் முடிவடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சீன அரசுடன் நெருங்கிய உறவுகளை கொண்டுள்ளதால், ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமானநிலையம் போன்ற திட்டங்களையும் இலாபம் பெரும் நோக்குடன் வெளிப்படைத் தன்மை மற்றும் சட்டரீதியாகவும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சீன அரசாங்;கத்துடன், தங்களால் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் தீர்மானத்திற்கு அமைய குறித்த திட்டங்கள் எதிர்காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.