அஹுங்கல்ல போகஹபிட்டிய பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அஹுங்கல்ல போகஹபிட்டிய பகுதியில் அடையாளந் தெரியாத நபர்களினால் நேற்று இரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த இருவர் சிகிச்சைகளுக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.