650 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை சீனா இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த உதவித் தொகை இன்று (23) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு சீனா இலங்கையுடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.