ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழுவின் தலைவராக விஜயதாச

126 0

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் தலைவராக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

பாராளுமன்றத்தின் 118 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகள் மற்றும் 2022 ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டிருந்தனர். அதற்கமைய இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக  டிலான் பெரேரா,  டலஸ் அழகப்பெரும,  வாசுதேவ நாணாயக்கார,  கபீர் ஹஷீம்,  ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார,  (திருமதி) தலதா அதுகோரல,  கனக ஹேரத்,  விஜித பேருகொட,  தாரக்க பாலசூரிய, அநுராத ஜயரத்ன,  ஜீ.ஜீ. பொன்னம்பலம், ஹேஷா விதானகே,  (திருமதி) கோகிலா குணவர்தன,  வீரசுமன வீரசிங்ஹ மற்றும்  சமன்பிரிய ஹேரத் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.