கல்லடி கடற்கரையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

117 0

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவற்குடாவைச் சேர்ந்த 45 வயதுடைய பாக்கியரெட்ணம் ரஜேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீனவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.