ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் உதவி நிர்வாக அதிகாரியும், ஐ.நா. அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணியகத்தின் பணிப்பாளருமான கன்னி விக்னராஜா மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் அதிகாரிகள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வேலைத்திட்டங்கள் குறித்தும் , இலங்கையின் நெருக்கடி நிலைமைக்கான ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொடுக்கும் பொதுவான வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.