அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு அமைக்கப்பட்டுள்ள தேசிய சபைக்கு உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (23) சபாநாயகரின் அறிவிப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அதன் பிரகாரம்
தேசிய சபை அமைப்பதற்கு கடந்த 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டதன் பிரகாரம் சபாநாயகரை தலைவராகக்கொண்டு, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், சபை முதல்வர், ஆளும் கட்சி பிரதம கொறடா ஆகியோரைக்கொண்டு இயங்கும் தேசிய சபையில் பணியாற்ற ஏனைய கட்சிகளின் அபிப்பிராயத்தின் பிரகாரம் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில், அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, நஸீம் அகமட், டிரான் அலஸ், ராஜாங்க அமைச்சர்களான சிசிர ஜயகொடி, சிவனேசத்துறை சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ரவூப் ஹக்கீம், பவித்ராதேவி வன்னியாரச்சி, வஜிர அபேவர்த்தன, ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், திஸ்ஸ விதாரண, ரிஷாத் பதியுதீன், விமல் வீரவன்ச,வாசுதேவ நாணயக்கார, பழனி திகாம்பரம், மனோகணேசன் ஆகியோரும் உதய கம்மன்பில, ராேஹித்த அபேகுணவர்த்தன, நாமல் ராஜபக்ஷ், ஜீவன் தொண்டமான், ஜீ.ஜீ. பொன்னம்பலம், அத்தரலியே ரத்தன தேரர், அசங்க நவரத்ன, அலிசப்ரி ரஹீம்,சீ,வி. விக்னேஸ்வரன், வீரசுமன வீரசேகர மற்றும் சாகர காரியவசம் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர் என்றார்.