யாழில் வீடுகளை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது

122 0

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்று வந்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆட்கள் அற்ற வேளைகளில் வீடுகளின் கதவுகளை உடைத்து உட்புகுந்து வீட்டில் இருந்த பொருட்களை களவாடும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

முறைப்பாடுகளின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மூன்று சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து வெற்று எரிவாயு சிலிண்டர், எரிவாயு அடுப்பு , தொலைக்காட்சி பெட்டி , நீர் இறைக்கும் மின் மோட்டார் உள்ளிட்ட ஏழு இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அதேவேளை குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக திருட்டுக்குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

கைது செய்யப்பட்ட நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.