திருக்கோணேஸ்வரர் ஆலய விவகாரத்திற்கு தீர்வு காண வெகுவிரைவில் அங்கு செல்வேன். நாட்டில் உள்ள அனைத்து இன மக்களின் மதம்,கலாசாரம் மற்றும் பண்பாட்டு அம்சங்களை பாதுகாக்க வேண்டியது எனது பொறுப்பு என புத்தசாசனம் மற்றும் மத உரிமைகள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற திருகோணேச்சரம் ஆலய நில ஆக்கிரமிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
வடக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.மதம் மற்றும் இனத்தை அடிப்படையாக கொண்டு தொல்லியல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.வரலாற்று ரீதியில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் போது ஆய்வுகள் ஊடாகவே தீர்வு காண முடியும்.
ஆய்வுகளை அடிப்படையாக்க கொண்டு கிடைக்கப்பெறும் தீர்வுகளை கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.தொல்லியல் தொடர்பில் பாராளுமன்றத்தின் ஊடாக இயற்றப்பட்ட சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.சட்டத்திற்கு அமைய செயற்படாவிடின் இயற்றப்பட்ட சட்டம் எதற்கு என்ற கேள்வி தோற்றம் பெறும்.
வு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தொல்லியல் தொடர்பில் இரு தரப்பினரும் மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிட்டுக்கொள்கிறாரகள்.மதம் மற்றும் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு இன்னும் எவ்வளவு காலம் முரண்பட்டுக் கொண்டிருப்பது.
கோணேச்சரம் ஆலயம் தொடர்பில் இரு தரப்பினராலும் பல விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன.வெகுவிரைவில் திருகோணேச்சரம் ஆலயத்திற்கு செல்வேன் ஆலயத்தின் நிர்வாக தரப்புடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு முரண்பாடற்ற தீர்வை பெற்றுக்ள முயற்சிப்பேன்.நாட்டில் வாழும் அனைத்து இன மக்களின் மதம் மற்றும் கலாசார பண்பாட்டு அம்சங்களை பாதுகாக்க வேண்டியது எனது அமைச்சுசார் பொறுப்பாகும் என்றார்.