ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட நெப்டியூன் கோளின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. நாசா வெளியிட்ட படத்தில், நெப்டியூன் கோளின் வண்ணமயமான வளையங்களும் அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நெப்டியூனின் 14 துணைக்கோள்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
நெப்டியூனை சுற்றி வரும் நிலவுகளில் ட்ரைடான் நிலவும் ஒன்று. மிகப் பெரிய அளவையுடைய ட்ரைடான் நெப்டியூனின் வளைவுப் பாதையில் சுற்றி வரும் காட்சியும் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கியில் பதிவுச் செய்யதுள்ளது. தற்போது இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சூரியனை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் ஆகிய கோள்கள் தனித்தனி பாதைகளில் சுற்றி வருகின்றன. நெப்டியூன் எட்டாவது கோளாகச் சூரியனைச் சுற்றிவந்தது. சூரியனுக்கும் நெப்டியூனுக்கும் உள்ள தொலைவு சுமார் 450 கோடி கிலோ மீட்டர். பூமி, சூரியனைச் சுற்றிவர ஓராண்டு காலம் ஆகிறது. நெப்டியூன் ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 164 பூமி ஆண்டுகள் ஆகின்றன. நெப்டியூன் கோள் சூரிய மண்டலத்தின் எல்லையில் உள்ளது. தொலைநோக்கி மூலம் பார்த்தால் நீல நிற ஒளிப்புள்ளியாகத் தெரியும்.
In visible light, Neptune appears blue due to small amounts of methane gas in its atmosphere. Webb’s NIRCam instrument instead observed Neptune at near-infrared wavelengths, so Neptune doesn’t look so blue! pic.twitter.com/aZZa8B8x4f
— NASA Webb Telescope (@NASAWebb) September 21, 2022ஜேம் வெப் தொலைநோக்கி: நாசாவின் மைல்கல்லாகப் பார்க்கப்படும் ஜேம் வெப் விண்வெளி தொலைநோக்கி கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ணில் ஏவப்பட்டது. பால்வீதியில், பூமியைப் போன்று உயிர் இருந்த/இருப்பதற்குச் சாத்தியமான புறக்கோள்கள் (exoplanets) இருக்கின்றனவா, பெருவெடிப்பிலிருந்து முதல் விண்மீன் கூட்டங்கள் எப்படி உருவாகின போன்ற பல கேள்விகளுக்கு இத்தொலைநோக்கி பதில் சொல்லும் என்று நாசா தெரிவித்தது.பூமியின் வெப்பத்தின் காரணமாக வரும் அகச்சிவப்புக் கதிர்கள் தொலைநோக்கிக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக, பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் ஜேம்ஸ் வெப் நிலைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலை நோக்கி விண்வெளியில் பதிவு செய்த புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜூலை மாதம் வெளியிட்டார். இந்தப் புகைப்படம் கேலக்ஸி கிளஸ்டர் SMACS 0723 என்று அழைக்கப்படுகிறது. 1960-களில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் நாசா முனைப்புடன் இருந்தபோது, அதன் நிர்வாகியாக இருந்த ஜேம்ஸ் வெப்பின் பெயர் இத்தொலைநோக்கிக்கு சூட்டப்பட்டுள்ளது. சுமார் ரூ. 75,000 கோடி செலவில் இந்த தொலை நோக்கி உருவாக்கப்பட்டுள்ளது.