இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற 9000 இராணுவ வீரர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இராணுவத்தில் இருந்து 25,000 வீரர்கள் இடைவிலகியுள்ளனர்.
அதில் 16,000இற்கு அதிகமானோர் கடந்த வாரங்களில் சட்டரீதியாக இராணுவத்தில் இருந்து விலகியுள்ளனர்.
கடந்த 12ஆம் திகதியுடன் முடிவடைந்த பொதுமன்னிப்புக் காலத்திலே இவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, இராணுவத்தில் இருந்து சட்டரீதியாக விலக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் பொதுமன்னிப்புக் காலப்பகுதியில் சரணடையாத ஏனைய 9000 இராணுவ வீரர்கள் கைதுசெய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.