அரசாங்கம் தொடர்பில் சர்வதேசத்துக்கு நம்பிக்கை இல்லை. அதனால் அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கே தேசிய சபை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.
அத்துடன் இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இல்லை. அதனால்தான்தான் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு தேர்தல் ஒன்று்கு செல்லவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) பிரதமரினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய சபை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கத்துக்கு எதிராக எழுந்த மக்கள் போராட்டத்தின்போது போராட்டக்காரர்களால் தெரிவிக்கப்பட்ட முறைமை மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே ஜனாதிபதி தேசிய சபை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.
நிதி தொடர்பான தீர்மானங்களை இந்த சபை ஊடாக மேற்கொள்வதே இதன் நோக்கமாகும். ஏனெனில் அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச ரீதியில் பாரிய நிதி குற்றச்சாட்டு தெரிவிக்ப்பட்டு வருகின்றது.
அந்த குற்றச்சாட்டை போக்கும் தேவை ஜனாதிபதிக்கு இருந்தது. அதனால்தான் எதிர்க்கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேசிய சபை அமைத்து அதன் ஊடாக நிதி தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.
அத்துடன் இந்த அரசாங்கத்துக்கு தற்போது மக்கள் ஆணை இல்லை. மக்கள் அன்று வழங்கி மக்கள் ஆணை, தற்போது இந்த அரசாங்கத்துக்கு இல்லாமல் போயிருக்கின்றது.
பெரும்பான்மை வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியும் பிரதமரும் மக்களால் நிராகரிக்கப்பட்னர். அதன் பிரகாம் இந்த அரசாங்கத்துக்கும் அந்த மக்கள் ஆணை இல்லை. மக்கள் ஆணை இல்லாத அரசாங்கத்தினாலே தற்போது தேசிய கொள்கை அமைக்கப்போகின்றது. இது சரியாக அமையாது.
மேலும் நாங்கள் ஜெனிவா சென்றபோது நாட்டை காட்டிக்கொடுக்க செல்வதாக தெரிவித்தனர். எமது நாடு தொடர்பில் நாங்கள் தெரிவிப்பதற்கு ஒன்றும் இல்லை.
அனைத்து விடயங்களும் ஜெனிவாவில் இருப்பவர்களுக்கு தெரியும். அவர்கள் தெரிவிப்பதை கேட்டுக்கொண்டு இருப்பதற்கே எமக்கு ஏற்பட்டது.
நாட்டின் தற்போதை பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் இந்த அரசாங்கம்தான் என்பதை ஜெனிவாவில் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில் சர்வதேசம் இந்த அரசாங்கத்துக்கு நிதி உதவிகளை செய்வதற்கு முன்வருவதில்லை.
அதனால் நிதிதொடர்பில் பொறுப்பு கூறக்கூடிய அரசாங்கம் ஒன்றையே சர்வதேசம் கோரி வருகின்றது. இந்த அரசாங்கத்தின் மீது சர்வதேசத்துக்கு நம்பிக்கை இல்லை.
அதனால் அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கே எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு தேசிய சபை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.
எனவே அரசாங்கம் மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தேர்தல் ஒன்றுக்கு செல்லவேண்டும். தேசிய கொள்கை அமைப்பதற்கு மக்கள் ஆணை கிடைக்கும் அரசாங்கத்துக்கு இடமளிக்கப்படவேண்டும் என்றார்.