ஒரு தேசிய கொள்கையை வகுப்பதற்கு இப்போது தான் இந்த பேரவை தேவைபடுகின்றதா என்ற கேள்வி உருவாவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய பேரவை கூட்டத்திற்கு 10 உறுப்பினர்கள் வந்தால் போதும் என்ற குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் எதற்காக 35 பேரை அதற்காக தெரிவு செய்ய வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரச்சினைகளை தீர்த்து வைக்காமல் பேரவைகளை கொண்டுவருவதால் நாட்டில் எதுவும் நடக்க போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.