நாடு சீரழியக் காரணமானவர்களுக்கு மீண்டும் பதவிகள் – ரிஷாட் குற்றச்சாட்டு

117 0

நாடு சீரழியக் காரணமான இருந்த முன்னாள் அமைச்சர்களுக்கே மீண்டும் அமைச்சு பதவி நியமனங்களில் முன்னுரிமை வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் குற்றம் சாட்டியுள்ளார்.

இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா.வில் வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை செய்யாவிடின் சர்வதேசம் தண்டிக்கும் என்ற செய்தி எடுத்துரைக்கப் பட்டுள்ளதாகவும் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக பேச்சளவிலேயே கூறும் அரசாங்கம் நாட்டை பற்றியோ அரசியலமைப்பை பற்றியோ அல்லது நாட்டினுடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்தோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ரிஷாட் பதியூதீன் குற்றம் சாட்டியுள்ளார்.

வவுனியாவில் மக்கள் சந்திப்பொன்றில் பேசிய அவர், 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் காலதாமதம் செய்யாமல் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.