மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக நாடளாவிய ரீதியில் தொடர் மாநாடுகளை நடாத்துவது என மேலவை இலங்கை கூட்டணியின் முதலாவது செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் கட்சி ரீதியாக மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக எதிர்வரும் தேர்தலில் எவ்வாறு செயற்படுவது மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தக் கூட்டத்திற்கு ஒவ்வொரு கட்சியிலிருந்தும் 5 பேர் ஆஜராக வேண்டும் என்றும் அவர்களில் ஒருவர் பெண் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.