கிளிநொச்சி – பரந்தன், சிவபுரம் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் 11 மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 16ஆம் திகதி சிவபுரம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.