ஜனாதிபதி தலைமையில் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் 3ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகி ஒன்றரை மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனம் இதுவரை இடம்பெறவில்லை.
இரு பிரதான குழுக்களின் தலைவர் பதவியையும் எதிர்க்கட்சிக்கு வழங்க முடியாது என பொதுஜன பெரமுன எதிர்ப்பு தெரிவிப்பதால் இவ்விரு குழுக்களுக்குமான தலைவர் நியமனம் சுமார் ஒன்றரை மாத காலமாக இழுபறி நிலையில் உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதி ஒன்பதாவது பாராளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடரை ஒத்திவைத்ததை தொடர்ந்து பாராளுமன்ற ஒழுங்கு முறைக்கமைய 2ஆவது கூட்டத்தொடரின் குழுக்கள் அனைத்து கலைக்கப்பட்டன.
கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களின் தலைவர் பதவி ஐக்கிய மக்கள் சக்தி வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ,எதிர்தரப்பின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல உள்ளிட்டோர் சபாநாயகரிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
கோப் மற்றும் கோபா ஆகிய இரு குழுக்களின் தலைவர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்க பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவிக்காத காரணத்தினால் இவ்விரு பிரதான குழுக்களுக்குமான தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனம் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது.
கோப் குழுவின் தலைவர் பதவிக்க பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன,கோபா குழுவின் குழுவின் தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசிம் ஆகியோரின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார பரிந்துரை செய்துள்ளார்.அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களுக்கான தலைவர் பதவியை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்குமாறு எதிர்தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில் அதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மறுப்பு தெரிவித்துள்ளது.கோப் குழுவின் தலைவர் பதவிக்கு பொதுஜன பெரமுன ஆளும் தரப்பின் உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவின் பெயரை பரிந்துரை செய்துள்ளது.
கோப் மற்றும் கோபா ஆகிய முக்கிய இரு குழுக்களின் தலைவர் பதவிகளையும் எதிர்க்கட்சிக்கு வழங்க முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் திட்டவட்டமாக தெரிவித்தார்.இவ்வாறான பின்னணியில் இவ்விரு பிரதான குழுக்களுக்குமான தலைவர் மற்றும் உறுப்பினர் தெரிவு ஒன்றரை மாத காலமாக இழுபறி நிலையில் உள்ளது.
9 ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து கோபா மற்றும் கோபா ஆகிய குழுக்கள் கலைக்கப்பட்டன.இரண்டாவது கூட்டத்தொடரின் கோப் குழுவின் தலைவராக பேராசிரியர் சரித ஹேரத்இகோபா குழுவின் தலைவராக போராசிரியர் திஸ்ஸ விதாரன ஆகியோர் பதவி வகித்தனர்.