நட்டமடையும் அரச நிறுவனங்களுக்கு முன்னாள் அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கூறியுள்ளார்.
கோப் குழுவினால் நட்டமடைந்து வரும் அரச நிறுவனங்கள் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில்வழங்கிய அமைச்சர், அரச நிறுவனங்களை கடந்த அரசாங்கம் முறையாக நடத்த தவறியதாலேயே அவை நட்டமடையும் நிலைக்கு சென்றதாக கூறியுள்ளார்.