யாழ்ப்பாணம் உடுவில் தொம்பை வைரவர் ஆலய வளாகத்தினுள் நின்ற பனை மரங்களுக்கு விஷமிகள் தீ வைத்தமையால் 20 பனைகள் முற்றாக எரிந்து கருகியுள்ளன.
யாழ்ப்பாணம் தொம்பை வீதியில் உள்ள தொம்பை வைரவர் ஆலய வளாகத்தினை சூழ பனை மரங்கள் காணப்பட்டன. அவற்றுக்கு விஷமிகள் தீ வைத்துள்ளனர்.
பனை மரங்கள் திடீரென தீ பற்றி எரிவதனை அவதானித்த அயலவர்கள் உடனடியாக தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்தமையை அடுத்து , அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீயணைப்பு படையினர் விரைந்து செயற்பட்டமையினால் , தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எனவும் , அதனால் அயலில் இருந்த தென்னம் தோட்டம் மற்றும் மேலும் பல பனை மரங்கள் தீயினால் அழிவடைந்திருக்கும் என அப்பகுதி வாசிகள் தெரிவித்தனர்.
குறித்த தீயினால் 20 பனை மரங்கள் எரிந்து கருகியுள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டமையை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்