கல்குடா மீடியா போரம் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம். பாரிஸ் மூலம் தாயிடம் இந்த நிதியுதவித் தொகை வழங்கிவைக்கப்பட்டது.
புத்தளம், கல்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவின் ஹுசைனிய்யா புரத்தை சேர்ந்த 24 வயதான இளம் தாய் ஒருவர், கடந்த மாதம் 27ஆம் திகதி ஓர் ஆண், மூன்று பெண் என நான்கு சிசுக்களை ஒரே சூலில் பிரசவித்திருந்தார்.
அக்குடும்பத்தின் ஏழ்மை நிலையைக் கருத்தில்கொண்டு, நாடளாவிய ரீதியில் இன, மத வேறுபாடின்றி பல்வேறு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வரும் தியாகி அறக்கொடை நிதியம் உதவ முன்வந்து, முதல் கட்டமாக மேற்படி ஒரு இலட்சம் ரூபாயை வழங்கியுள்ளது.