சந்தையில் மீண்டும் அரிசி தட்டுப்பாடு

320 0

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயித்துள்ளதை தொடர்ந்து சந்தையில் மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நெல் ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டுப்பாட்டு விலையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ள நாளைய தினம் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக மரதகஹமுல அரிசி உற்பத்தி சங்கத்தின் தலைவர் பீ.கே.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை மாற்றுவதற்கு எவ்வித அவசியம் இல்லை என பொலன்னறுவை அரிசி உற்பத்தியாளர்கள் தெரிவத்துள்ளனர்.

மரதகஹமுல அரிசி உற்பத்தியாளரக்ள் சந்தைக்கு அரிசியினை விநியோகிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.