கண் லென்ஸ்களுக்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிக்கையை உடனடியாக அச்சிட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மக்களுக்கு குறைந்த விலையில் கண் லென்ஸ்களை பெற்றுக்கொடுத்தல் இதன் நோக்கமாகும்.
தற்போது காணப்படும் விலையை விட நூற்றுக்கு 50 சதவீதத்தில் கண் லென்ஸின் விலை குறைக்கப்படும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.