காவற்துறை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு

455 0

காலி – நாகொட காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் 37 வயதுடைய நபரொருவர் காவற்துறையினர் தாக்கிய காரணத்தால் உயிரிழந்துள்ளதாக அவரின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

உயிரிழந்த நபரின் இறுதி கிரியைகள் எல்பிடிய – கஹதுவ – கடஹேன பிரதேசத்தில் இடம்பெற்றது
இதன் போது , உயிரிழந்த நபரின் பூதவுடலை கஹதுவ – கடஹேன வீதியில் வைத்து வீதியை மறிக்கும் வகையில் பிரதேசவாசிகள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அது , அவரின் மரணத்திற்கு காவற்துறையினர் பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்தாகும்.

கஹதுவ பிரதேசத்தை சேர்ந்த காமினி பிரஷாந்த என்ற 37 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 9ம் திகதி கஹதுவ கடஹேனவத்த வீதியில் வைத்து நாகொட காவற்துறையால் கைது செய்யப்பட்டிருந்தார்.

நீதிமன்றத்தை புறக்கணித்த சம்பவம் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்ததாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பின்னர் அடுத்த நாள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

சிறைச்சாலையினுள் ஏற்பட்ட கடும் நோய் நிலைமை காரணமாக கராபிடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

எவ்வாறாயினும் , அவரை கைது செய்யும் போது காவற்துறையினர் தாக்கியுள்ளதாக அவரின் தாய் மற்றும் சகோதரர் எனது செய்திச் சேவைக்கு தெரிவித்தனர்.

இது தொடர்பில் எமது செய்திச் சேவை நாகொட காவற்துறையிடம் வினவியது.

உயிரிழந்தவரின் உறவினர்களின் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக அதன் பேச்சாளரொருவர் அதன் போது தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில அவரது உறவினர்களிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.