ஐ.எம்.எப். ஒப்பந்தம் குறித்து கடன்வழங்குநர்களுக்கு விளக்கமளிக்க தயாராகும் இலங்கை!

122 0

அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னேற்றம் அடைந்துள்ளது.

இந்த முன்னேற்றம் குறித்து இலங்கையின் கடன் வழங்குநர்களுக்கு, அறிவிக்கப்படும் என உலகளாவிய சட்ட நிறுவனமான, கிளிஃபோர்ட் சான்ஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தெளிவூட்டல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இணைய வழியாக நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட்ட பல நாடுகளிடம் இலங்கை கடனைப் பெற்றுள்ளது.

அத்தோடு இறையாண்மை பத்திரங்களிலும் கடன்களை பெற்றுள்ள நிலையில் சுமார் 50 பில்லியன் டொலர்களை இலங்கை செலுத்த வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.