நாடு முழுவதிலும் நிர்மாணங்களுக்காக செலுத்தப்பட வேண்டிய 2,000 கோடி ரூபா திறைசேரியில் உள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி இதனை தெரிவித்தார்.
நெடுஞ்சாலைகள் அமைச்சின் நிர்மாணத்திற்காக 8,000 கோடி ரூபாயை செலுத்த முடியாது என திறைசேரி அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கைக்கு கட்டுமான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் போது பற்றாக்குறையான பொருட்களுக்கு பதிலாக உபரியான பொருட்களை இறக்குமதி செய்ய சந்தர்ப்பம் வழங்கி மோசடி வியாபாரம் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.