எரிபொருளின் விலை ஏன் குறைக்கப்படவில்லை-கெமுனு விஜேரத்ன

133 0

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வரும் பின்னணியில் இலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்படாமை தொடர்பில் அரசாங்கம் உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்படும் என பொறுப்பான அமைச்சர் முன்னர் தெரிவித்திருந்ததாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

அமைச்சர் கஞ்சன விஜேசேகர உறுதியளித்தபடி விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.